மீன்சந்தை கட்டடத்தொகுதி,
முன்பக்கம் ஆட்டிறைச்சி கடைகள்.
பின்பக்கம் மூத்திரநெடி சூழ்
வயற்பக்கம்.
பரபரவென்று வந்துமோதும்
வயற்காற்று.
அப்பால் ஆமணக்கம் பற்றை தாண்டிய
நூலகம்.
நூலக வளாகத்தில் குரோட்டன் செடிகள்.
முன்றலில் இருந்தபடி சிலை.
சுற்றி நிறுத்தப்பட்ட சைக்கிள்களில்
என் சைக்கிளுடன்
அவள்களின் சைக்கிள்கள்.
வீதி தாண்டிய விறுமர் கோவில்.
பஸ் ஸ்ரான்டின் முனை சந்தில்
முன்னொருகாலம்
பேப்பர் திராட்சை விற்கும்
படிகளின் கீழான கடை.
கிருயோன் கூல்பார்.
முன்னால் டிறிபேர்க் கல்லூரி.
யாழ் செல்லவென
புத்தகக்கட்டுடன் நின்ற
இறந்த காலத்து காலைகள்.
அரை றாத்தல் பாண் என விளிக்கும்
மினி பஸ்கள்.
பஸ் கடக்கையில் விலத்தியது
நுணாவில் வைரவர்கோவில்.
அட! நம்ம குமுதம் வீடு.
மூக்கில் நெடிந்த பாணின் வாசம்
யூனியன் பேக்கரி வினவுதல்கள்.
ஆங்கோர் பொழுதில்
பனிக்குளிர் துளைத்தெடுக்க
பகற்பொழுதில் அலாரம் வைத்து
பின்னிரவில் விழித்தெழும்
நான் தொலைத்தது
என்னை, எங்களை, எல்லாவற்றையும்!
எனது தளத்தை மேய்பவர்கள் கீழ்காணும் google+1 ஐ அழுத்தி email ID கொடுப்பதன் மூலம் புது இடுகைகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்வீர்கள்.
\\ நான் தொலைத்தது
என்னை, எங்களை, எல்லாவற்றையும்!\\
கவிதை நெஞ்சைக் கணக்கச் செய்கிறது. பகிர்விற்கு நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on மே 2, 2012
at 12:48 பிப
மண்ணின் மணம் கவிதை முழுவதும் பரவி மனத்தை நிறைக்கிறது.
By: Dr.M.K.Muruganandan on மே 2, 2012
at 3:42 பிப