ஆருத்ரா எழுதியவை | மே 10, 2012

வடிவேலுவின் சித்தாந்தம்.

 

காலையில் கண்விழித்ததும்
வந்தமர்ந்து கொள்கின்றன.
கடமைகளும், காரியங்களும்.

எதை விடுவது?
எதைத் தொடர்வது?

டாய்லெற்றிலிருந்து
வெளிவருகையில் கேட்கின்றாய்.
“அண்ணே! சாப்பிட்டாச்சா?”

வடக்குபட்டி ராமசாமியிடம்
கொடுத்ததை
திரும்பப் பெறமுடியவில்லை.
“புட்டுக்கிட்ட கேஸ்”

ஒரு ரூபாய் கொடுத்து
வாங்கச் சொன்ன
இரண்டு பழத்தில்
“இன்னொண்ணும் இதுதாங்க”
என்கிறாய்.

எப்படிப் பிழைப்பேன் நான்?

தெரிவுகள் பிழைக்கையில்
வலுப்பெறுகின்றன.
“ஆணியே புடுங்க வேண்டாம்” எனும்
சித்தாந்தம்.

அவ்வ்வ்வ்.

—————————————————————————————————————————————————-


மறுவினைகள்

  1. வடிவேலு படத்தில் பேசும் வசனங்கள் மூலம் மதுரைத்தமிழும் உலகெங்கும் பரவியது. நல்ல கவிதை. பகிர்விற்கு நன்றி.


சித்திரவீதிக்காரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்