நலமா? உங்கள் இருவருக்கும் தனியே கடிதம் எழுதவே விருப்பம். பின்நாட்களில் தாங்கள் ஆன்மீகத் தொலைவிற்கு அப்பாற்பட்டு, தங்களுடன் தகாத செயலுக்கு வற்புறுத்தியதாக குற்றம் சுமத்தி, நானும் கம்பி எண்ணும் பெரும் பாக்கியத்தை தவிர்க்கவே இவ்வாறான “மூடிமறைப்பில்லாத கடிதம்“
நீங்கள் இருவரும் எவ்வாறு மூடி மறைப்பதில்லையோ அவ்வாறே நானும் மூடிமறைப்பதில்லை. பேச்சு பேச்சாக இருக்க வேண்டும். தாங்கள் இருவரும் முற்றும் துறந்தவர்கள். ஆசைகளை,பாசங்களை,உறவுகளை துறத்தலே உண்மை ஆன்மீகவாதிக்கு அழகு. தனக்கென ஒற்றைக் கோவணத்தையும், தனக்கென பிச்சாபாத்திரத்தை வைத்திருக்காததுமே ஆன்மீகவாதியின் அடையாளம் எனச் சான்றோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். உங்கள் இருவரையும் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதில்லை. விழிப்புணர்வு கொண்ட மானுடனிற்கு தென்படுவதெல்லாம் இறைசக்தி! தெய்வாதியர்கள்!!
ஆனால் என்னவொரு வித்தியாசம், கட்டிலில் அடிக்கடி முற்றும் துறக்கின்றீர்கள். ஆடை,ஆபரணம்,கழுத்தணிகலன்கள் (கவனம்: குத்தி தொலைத்து விடப்போகின்றது) என எல்லாவற்றையும் துறக்கின்றீர்கள். துறவி என்ற சொல்லிற்கே அதிக அர்த்த பரிமாணத்தை கற்றுத்தந்தவர்கள் நீங்கள் என தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலையாரிகள் உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். கொண்டாடட்டும். உனக்கென்ன ஆயிற்று? எனக் கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் இப்போது முழு விழிப்புணர்வு நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றேன். எனது விழிப்புணர்வின் நோக்கம் இறைசக்கதியை உய்த்துணர்வது,இறைவனுடன் நித்தியத்தில் கலப்பது என்பதென எதுவாகவும் இருந்திருக்க வேண்டும், நான் உங்களிடம் ஏமாறுவதற்கு முன்பு. காலம் செய்த சதியில் நானும் ஏமாந்து தொலைத்துவிட்டேன்.
ஒரு சின்னப்பயலுக்கு இவ்வளவு ஆன்மீகத் தெளிவா? ஆன்மீகத்தை சிறுவயதில் உய்த்துணர்ந்த பாலகுருவாக காலம் தங்களை பிரசவித்திருக்கின்றது என மாய்ந்து மாய்ந்து எண்ணிக்கொண்டேன். திருவண்ணாமலை மிகுதியான ஆன்மீகத்தலைவர்களை, ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இறைவன் பெருநெருப்பாக,அக்னி சக்தியாக மிளிர்வது திருவண்ணாமலையில் தான் என்றெல்லாம் படித்த ஞாபகம். உன்னதத் துறவியான ரமணமகரிஷியும், சேஷாத்திரி சுவாமிகளும், வடஇந்தியாவைச் சேர்ந்தவர் எனினும் திருவண்ணாமலையில் குடிகொண்ட ராம் சூரத்குமார் யோகியரும் திருவண்ணாமலை என்ற அக்னித் தலத்தில் ஆச்சிரமம் அமைத்து, தாங்கள் கண்டநிலைக்கு மற்றையோரையும் வழிப்படுத்தி அழைத்துச் செல்ல முற்பட்ட தலம். ரமணாஷ்ரமத்தின் பின்பகுதியில் விருப்பாட்ஷை குகை என சுற்றிய இடமெல்லாம் தபோவனங்கள், ஆன்மீகவாதிகள்.
அங்குதான் தாங்களும் திருக்கொண்டதாக தங்களின் பக்தகேடிகள் (கோடிகள்) வெளியில் பரப்பித்திரிகின்றார்கள். திருவண்ணாமலையின் உன்னதம் உங்களால் கெட்டுவிடப்போகின்றது என தங்கள் தாயாரே கனவில் நினைத்திருக்கமாட்டார்.
திருவண்ணாமலைப் பெரும்பாறையொன்றில் ஒருநாள் மதியம் நீங்கள் இறையுடன் கலந்ததாக டப்பாச் செய்தியை தங்களின் புத்தக வரிகளில் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள். நீங்களாவது எழுதுவதாவது? அந்த நேரக் கணக்குகளில் ஆயிரம் சில்மிஷங்கள் செய்யலாம் உங்களால் ரஞ்சிதாவுடனோ? அருகிருந்து சாமரம் வீசும் பெண்டிருடனோ?
இயக்குனர் சங்கர் முதல்வன் படத்தில் அறிமுகப்படுத்திய டிக்கிலோனா, கப்ளிங்ஸ், spoon passing எல்லாவற்றையும் ரஞ்சிதாவுடன் முயற்சித்துப் பார்த்ததுண்டா இறைமுதல்வோனே? கிரிவலப்பாதையில் பாதையில் தங்கள் ஆசிரமம் கண்டு வியந்து போனேன். ஒருமுறையேனும் உள்நுழைந்து யோகக்கிரியாதி முறைகளில் நானும் தேர்ச்சி பெற வேண்டும் என அடுத்தடுத்த முனைவுகள் என்னுள். எனது வயது அப்படி எல்லாம் யோசிக்க வைத்தது. ஆழ்ந்து அனுபவித்தாயிற்று, அடுத்த கட்டம் இறைவழி என என்னுள் வியாபித்தது.
முதலிலிருந்தே ஆழ்ந்து அனுபவிக்க தாங்கள் இப்பொழுதுதான் தொடங்குகின்றீர்கள். பாலபாடம், இடைநிலை (றஞ்சிதாவின் இடைநிலை) , மேல்நிலை என ஆன்மீகத்தின் சகலகூறுகளையும் கற்று சற்றே தெளிவான பாதைக்குள் நுழைவதற்கு, தங்களை முன்னிலைப்படுத்தியது பெரும் தவறென உணர்கிறேன். நான் விழிப்பு நிலையிலிருந்து விண்ணான நிலைக்குள் விழுந்தது இங்குதான்.
அந்த இடைவேளைக்குள் தாங்கள் கட்டம் கட்டி கபடி ஆடிவிட்டீர்கள் றஞ்சிதாவுடன். காமத்து ஸூத்திரங்களை தாங்கள் பிரயோகித்துப் பார்க்க கிடைத்த பரிசோதனைசாலை தான் ரஞ்சிதாவா? என எனக்கு தலை கிறுகிறுக்கிறது. அவ்விடத்தில் ஆனந்தத்தேன் பெருக்கெடுத்தோடிப் பாய்ந்ததா? என இருவரில் ஒருவர்தான் சொல்லவேண்டும் ஐயனே!
இடையில் ஏன் மதுரை ஆதீனம் பரமஹம்ச சுவாமிகளையும் உள்ளிழுத்துக் கொண்டீர்கள். ஏதாவது பரஸ்பர பரிமாற்றமா? நான் தேடியலைந்தது இறைவழியை. தாங்கள் காட்டியது கறைவழியை.
இயமம், நியமம், ஆசனம், பிரணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை, தியானம், சமாதி எனப் படிநிலைகளைக் கொண்டது இறைவனைக் கூடுவது. தாங்கள் இயமத்திலேயே அடிபட்டு மண்கவ்விக் கொண்ட மகாசுதன், மகாஉன்னதன். இறைவனைக் கூடுதல் என்பதையே தப்பாகப் புரிந்து கொண்டு ரஞ்சிதாவுடன் கூடுவதாக எனது திருதிராட்டின நண்பர்கள் கேலி செய்து சிரிக்கின்றார்கள்.
நீங்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலிருந்து அவன் கவனிக்கின்றான் என்ற சொற்றொடரை. அந்த அவன் கனொன் கமராவாகவோ, நிக்கொன் D 5000 ஆகவோ இருந்து தொலைக்கப்போகின்றது. நீங்கள் HI TECH சாமியார்களாச்சே. புது TREND எனப்படும் காலத்தை சமைக்கும் கனபுருஷர்களே.
மதுரை ஆதீனத்தை நினைத்தால் கவலை வந்து என்னுள் உட்கார்ந்து கொள்கின்றது. திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்டதாக மதுரை ஆதீனம் சொல்லிக்கொள்கின்றது. சிறுவயதிலேயே தேவாரம் பாடி உமைப்பால் குடித்த உன்னதரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைஆதீனத்தில் ரஞ்சிதாவின் முலைப்பால் குடிக்கும் நித்தியானந்தாவோ ஆட்சி செய்வது என ஒரு கடம்ப கவிஞர் கவிதை வரைகின்றார். 292 பேர் பீடாதிபதிகளாக பரிமளித்த மதுரை ஆதீனம் 292 ஆலும் 293 ஆலும் களங்கப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கன காலத்திற்கு முன்பே இறையடி சேர்ந்த திருஞானசம்பந்தர், முன்பே உய்த்துணர்ந்து கொண்டிருந்தால் திருநீற்றுப்பதிகம் பாடாமல் பாண்டிய மன்னனின் வெப்புநோயை தன்னுள் உள்வாங்கி தன்முடிவை தானே தேடிக் கொண்டிருப்பார்.
இந்துமதத்தின் மிகப்பெரியஅவமதிப்பாளர் நீங்கள். இந்துமதத்தை உலகில் மிகக் கேவலப்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர். பிரேமானந்தா தொடங்கி காஞ்சி சங்கராச்சாரியார் ஊடாக உங்களின் ஆன்மீகமும் அழுக்கடைந்து அலைக்கழிகின்றது. ஒரு கிருஸ்தவனுக்கும், ஒரு முஸ்லிமுக்கும் முன்னால் இந்து மதத்தை சேர்ந்தவனாகிய நான் தலைகவிழ்ந்து நிற்பது, பூட்டிய அறைக்குள் யாரும் பார்க்கமாட்டார்களே என்ற தைரியத்தில் றஞ்சிதாவும் நீங்களும் ஆடிய கப்ளிங்ஸ் ஆட்டம்தானே ஐயன்மீர்?
மரணபயம் ஒன்றே ஆன்மீகத்தை வழிநடத்தி அழைத்துச் செல்கின்றது. சாதாரண மானுடன் ஒவ்வொருவனும் தன்னிலை உணர்வதற்கும், மேல்நிலை காண்பதற்கும் மதத்தை வழிகோலாக்கி பயணிக்கின்றான். மதங்களும், இறைவனும், இறைநோக்கமும் அழகானவை: அப்பழுக்கில்லாதவை. மனிதனும், தெய்வ உருவில் நடமாடும் மானுடர்களும் சேறு பூசி அழுக்காக்கி வைத்திருக்கின்றார்கள்.
நிறுவனரீதியாக இந்துமதம் ஒன்றே மற்றோரை ஆக்கினை செய்யாதது: வளர்த்தெடுக்கப்படாதது என்றெல்லாம் கூறி பெருமைப்பட்டுக் கொண்ட காலம் மலையேறியாயிற்று. இந்துமதத்தின் மிகப்பெரும் நிறுவன வியாபாரமாக, ஆன்மீகத்தை ஆக்கி பிழைக்கக் கற்றுக்கொண்ட ஆதிவேசித்தனத்தின் ஆன்மீகப்பற்றாளரான நீங்களும், அவிழ்த்துப்போட்டு ஆடிய றஞ்சிதாவும், அண்மையில் சேர்ந்துகொண்ட மதுரை ஆதீனமும் கழுத்துவரை மணலில் புதைக்கப்பட்டு யானையின் கால்களால் இடறிக் கொல்லப்படவேண்டியவர்கள். வரலாற்றுக் கறைகள் கால்களால் இடறப்படவேண்டும்.
“கதவைத்திற காற்று வரட்டும்”, “தியானம்” என்ற இரு புத்தகங்களையும் இந்தியக்காசு ஆயிரத்து இருநூறு ரூபாவிற்கு வாங்கி யோகத்தில் பழுத்துப்போக நான் செய்த முயற்சிகளின் பயன், உங்களால் பிய்ந்து போன கட்டில் மெத்தைகளுக்கு பதிலாக புதிது வாங்கப் பயன்பட்டிருக்கும் என நினைக்கின்றேன். எனக்கே கூச்சமாக உள்ளது: “கதவைத்திற காற்று வரட்டும்” புத்தகத்தின் இன்னொரு பிரதியை வாங்கி எனது தந்தையாருக்கு பரிசளித்ததற்கு. மகன் தந்தைக்காற்றும் உதவி கொல் எனும் சொல்.
மூலாதாரச்சக்தியை மேல் எழுப்பி சுவாதிஸ்டானம், மணிப்பூரகம், விசுத்தி, ஆங்ஞை வழியாக சகஸ்ராரம் வரை கொண்டு போய் நிறுத்துவதே உண்மை யோகிக்கு அழகு. தாங்கள் மாத்திரமே மூலாதாரச்சக்தியை கவட்டுக்குள் மாத்திரம் நிலை நிறுத்திக் கொண்டவர்கள். சிறுபராயத்தில் சுவட்டு மைதான மெய்வல்லுநர் போட்டிகளில் முதலிடம் பெற்றீர்களோ? இல்லையோ? நீங்களும், றஞ்சிதாவும் கவட்டு மைதான மெய்வல்லுநர் போட்டிகளில் முதலிடம் பெறத் தகுதியானவர்கள்.
இப்போது நான் கேட்பது ஆன்மீகத்தை அல்ல. தவறான வழியில் நான் செலவழித்த எனது பணம் ஆயிரத்து இருநூறு ரூபாவையும் நீங்கள் திருப்பித் தரவேண்டும் என்பதே. புத்தகமாகத்தான் தந்தாயிற்றே என்பீர்களேயானால், நான் வாங்கி வைத்துக்கொண்டது மஞ்சள் பத்திரிகை என்பதை தாங்கள் உணரவேண்டும். ஆயிரத்து இருநூறு ரூபாவும், 24 மாத வட்டியுடன் சேர்த்து இரண்டாயிரம் ரூபா அளவில் வருகின்றது. உங்கள் சொந்தச் செலவில் மெத்தை வாங்கி அதில் வித்தை காட்டுக. கூடமாட ஒத்தாசைக்கு மதுரை ஆதீனத்தையும் வைத்துக் கொள்க.
அப்போது மாத்திரம் கதவைத் திற: காற்று வரட்டும் என இருந்து விடாதீர்கள். காற்றும் கூடவே காக்கிச்சட்டைகளும் வந்து விடக்கூடும். எனக்கு நான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்கின்றேன். எனக்குத் தரவேண்டிய பணத்தை முடிந்தால் முழுதாகத் தாருங்கள். அன்றேல் ரஞ்சிதாவை விட்டு தரச்சொல்லுங்கள். ரஞ்சிதா தருவதெனில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் முத்தமாகவும் தரலாம். முத்தமாகத் தருக! அதையும் மொத்தமாகத் தருக!! மொத்த முத்தத்துடன் வட்டி முத்தங்களும் ஏற்கப்படும்.
இங்ஙனம்
அல்லலுறும் அபலன்.
000000000ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
good writing … i liked ur way of writing.
By: kausikan on மே 23, 2012
at 7:27 முப
நண்பா அவர் எம்மாம்பெரிய ஆளு, இப்படி கண்ணா பின்னா என்று எழுதக்கூடாது. என்ன இருந்தாலும் அவர் நல்லை ஆதீன தலை அல்லவா? என்னால இதை ஒழுங்கா புகையிரதத்தில் வாசிக்க முடியலே அப்பா, என்னோடே சிரிப்பை கேட்டு எல்லோரும் ஒரு மாதிரியா பார்கிறங்க நண்பா.
By: shiva on மே 23, 2012
at 9:02 முப
கதவைத் திற காற்று வரட்டும்’ ஒன்றும் நித்தியானந்தாவின் கண்டுபிடிப்பு அல்ல. அவருக்கு அந்தளவு கவிபுனையும் ஆற்றலில்லை. அது சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்.
திருஞானசம்பந்தர் சமணர்களை மதுரையிலிருந்து அந்தக் காலத்தில் விரட்டி சைவத்தை நிலைநாட்ட ஆதினங்களை நிறுவினாராம். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும். கொஞ்சம் தாமதமாக விளைந்திருக்கிறது.
அங்கதச்சுவையுடன் கூடிய உங்கள் கட்டுரை அருமை.
By: சித்திரவீதிக்காரன் on மே 23, 2012
at 3:40 பிப
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
By: valaiyakam on மே 24, 2012
at 7:00 முப
நித்திய அனந்தன், பிரேம அனந்தன், புட்டபர்த்தி சாய் போன்றவர்கள் சாமியார்க்ளுமல்ல; சன்னியாசிகளுமல்ல. காவியுடை கபட வேடதாரிகள். அவர்களின் ஒரே ஆயுதம், தங்களுக்கு கைவரப் பெற்ற இரண்டொரு கில்லறை சித்துகள் தான். கவனிக்க: அஷ்ட மா சித்துகள் அல்ல. ஆனால், இவர்கள் சி.சி வைத்துக் கொண்டே, எண் குணத்தானின் அருள் நிரம்பப் பெற்றவர்கள் போல கபட நாடகமாடுவதில் கில்லாடிகள். சாமியார்களுக்கும், சன்னியாசிகளுக்கும், துறவிகளுக்கும் இந்து மதம் சில கடுமையான சட்டத் திட்டங்களை வைத்துள்ளது. யாரும் எளிதில் அவற்றை கைக்கொள்ள முடியாது. இந்து மதத்தினைப் பற்றியும், கோட்பாடுகள் பற்றியும் கொஞ்சமும் அறியாத, ஆனால் (படித்த) பட்டம் பெற்ற இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் இவர்களின் சித்து விளையாட்டினை உண்மையென நம்பி தங்களின் எதிர்காலத்தினை இழக்கிறார்கள்.காவியுடையில் இவர்கள் செய்வதைத்தான் வெள்ளையுடைத் தரித்தும், கோட் சூட் தரித்தும் இன்னொரு மதத்தினரும் ஊர் ஊராய் “சுவிசேஷம்” செய்து வருகிறார்கள். யாரும் அறியாத ரகஸ்யம் என்னவென்றால், இறைவன் யாரையும் தனக்கு ஏஜெண்ட்டாக இன்னமும் நியமிக்கவில்லை.இவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு வழியுண்டு. அது: பற்றுக பற்றறான் பற்றினை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே, வள்ளுவன் சொன்ன எளிய ஆனால் இனிய
வழி.
By: venkataramani on மே 25, 2012
at 2:03 முப
நன்றி! வேங்கடரமணி.நல்ல கருத்துக்களை பகிர்ந்திருந்தீர்கள்.
By: ஆருத்ரா on மே 25, 2012
at 9:09 முப